கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » சுந்தர் சி. படத்திலிருந்து வடிவேலு விலகல் (Vadivelu withdraws from Guru Sizhyan)
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
சுந்தர் சி. நடிக்கும் குரு சிஷ்யன் படத்தில் வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டார். தலைநகரம் படத்துக்குப் பிறகு சுந்தர் சி-யின் எந்தப் படத்திலும் நடிக்காத வடிவேலு குரு சிஷ்யனில் நடிக்க ஒப்புக் கொண்டது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் அந்தப் படத்தின் கதை பிடிக்காததால் படத்திலிருந்தே விலகியிருக்கிறார். இதனால் குரு சிஷ்யனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஷக்தி சிதம்பரம் இயக்கும் இந்தப் படத்தில் சுந்தர் சி, வடிவேலு, ஹேமமாலினி ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தின் தொடக்க விழாவில் ஹீரோவுக்கு இணையாக வடிவேலுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

படத்தின் வியாபாரமே வடிவேலுவை முன்னிறுத்திதான் என்ற நிலையில் திடீரென நடிக்க முடியாது என மறுத்திருக்கிறார் வடிவேலு.

காரணம் கதை பிடிக்கவில்லையாம். ஆனானப்பட்ட ஆதவனே வடிவேலுவால் ஓடும்போது, திடீரென அவர் குரு சிஷ்யனிலிருந்து விலகியது அந்தப் படத்துக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: குரு சிஷ்யன், சுந்தர் சி, வடிவேலு