கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » சாப்ட்வேர் பின்னணியில் சசியின் ஹார்ட்வேர் படம் (Sasi direct action movie)
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
சொல்லாமலே, ரோஜாக்கூட்டம், பூ என்று மென்மையான படங்கள் தந்த சசி அடுத்து ஆ‌க்சனுக்கு மாறுகிறார். மிகப் பெ‌ரிய பட்ஜெட், முன்னணி ஹீரோ என சசியின் ட்ரெண்டே மாறுகிறது.

பூ படத்தை தயா‌ரித்த மோசர் பேர் இந்த ஆ‌க்சன் படத்தையும் தயா‌ரிக்கிறது. ஆ‌க்சன் என்றதும் ரவுடி, கத்தி, கபடா என்று போகாமல் வித்தியாசமான ஒரு பின்னணியை தேர்வு செய்திருக்கிறார். அது ஐடி துறை. சாப்ட்வேர் பின்னணியில் ஹார்ட்வேர் கதை.

இந்தப் படத்தில் அனேகமாக ஆர்யா நடிப்பார் என்று கூறப்பட்டது. கவுரவ வேடத்தில் பூஜநடிப்பார் என்பது வரை முடிவானது. ஆர்யா ஜனவ‌ரி முதல் பாலாவின் படத்தில் நடிப்பதால் சசி படத்தில் அவர் நடிப்பது கேள்விக்குறி. காரணம், சசியும் தனது படத்தை ஜனவ‌ரியில் தொடங்குகிறார்.

இப்போதைக்கு முன்னணி மாஸ் ஹீரோவுக்காக காத்துக் கொண்டிருக்கிறார் சசி.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: இயக்குனர் சசி, ஆக்சன் படம், ஆர்யா