எப்போதோ எதிர்பார்த்ததுதான், இப்போது நடந்திருக்கிறது. இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ஹீரோவாகிறார்.
மேடை என்றால் ஒதுங்கிப் போகும் விஜய் ஆண்டனியையே நடிக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். தேவிஸ்ரீ பிரசாத் அவரைவிட இளைஞர், மேடைகளில் பாடுவதுடன் ஆடவும் செய்கிறார். சும்மா விடுவார்களா?
தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலிருந்தும் நடிக்கச் சொல்லி அவருக்கு அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. முதலில் மறுத்தவர் இப்போது சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
தெலுங்கில் எம்.எஸ்.ராஜு தயாரிக்கும் படத்தில் தேவிஸ்ரீ பிரசாத் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக நடிப்பவர் ஹன்ஷிகா மோத்வானி. இவர் தனுஷின் மாப்பிள்ளை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிப்பவர் என்பது முக்கியமானது.
நடித்தாலும் இசையமைப்பதை மட்டும் விடமாட்டேன் என்கிறார் தேவிஸ்ரீ பிரசாத். நல்ல முடிவு, தமிழிலும் ஹீரோவாக நமது அட்வான்ஸ் வாழ்த்துகள்.