ஓவிய உலகில் என்றும் நிலைத்து நிற்கும் பெயர் ராஜா ரவிவர்மா. இவரது ஓவியங்களுக்கு மயங்காதவர்கள் இருக்க முடியாது. மலையாளிகளைப் பொறுத்தவரை இவர் ஒரு பெருமைக்குரிய பொக்கிஷம்.
ராஜா ரவிவர்மாவைப் பற்றிய படம் ஒன்று மலையாளத்தில் தயாராகிறது. படத்தை லெனின் ராஜேந்திரன் இயக்குகிறார். இதில் ரவிவர்மாவாக நடிப்பவர், பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான சந்தோஷ் சிவன்.
இந்த சரித்திரப் படத்தில் முக்கியமான வேடத்தில் ராதாவின் மகள் கார்த்திகா நடிக்கிறார். தெலுங்கு ஜோஷ் படத்துக்குப் பிறகு கார்த்திகா ஒப்புக் கொண்டிருக்கும் படம் இது.