கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » நரேன் படத்தில் மீனா (Meena in Naren film)
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
பூக்கடை ரவி படத்துக்குப் பிறகு நரேன் நடிக்கும் படம், தம்பிக்கோட்டை. அம்மு ரமேஷ் என்பவர் இதை இயக்குகிறார். இவர் ஜெயம் ராஜாவிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

பூனம் ப‌ஜ்வா நரேன் ஜோடியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர்களுடன் பிரபு, வடிவேலு ஆகியோரும் முக்கியமான வேடங்களில் நடிக்கிறார்கள்.

மலையாளத்தில் திருமணத்துக்குப் பிறகும் ஹீரோயினாகவே நடித்து வருகிறார் மீனா. தமிழ் சினிமாவுக்கு அந்தளவு தாராள மனசு கிடையாது. தம்பிக் கோட்டையில் மீனாவை நரேனுக்கு அக்காவாக்கியிருக்கிறார்கள்.

படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். வரும் டிசம்பர் படப்பிடிப்பு தொடங்குகிறது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: தம்பிக்கோட்டை, நரேன், மீனா