எண்ணி பத்து படம்தான் நடித்திருப்பார். அதற்குள் படம் தயாரிக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் சோனா. இவர் ஓடு மச்சி ஓடு என்ற படத்தை தயாரிப்பதாக சில வாரங்கள் முன்பு கூறப்பட்டது. அதனை இந்த மாதம் சோனா உண்மையாக்குகிறார்.
சோனா தயாரிக்கும் படத்தில் பிரேம்ஜி அமரன் ஹீரோவாக நடிப்பார் என தெரிகிறது. முக்கியமான வேடம் சோனாவுக்கும் உண்டு. புதுமுகம் ஒருவர் படத்தை இயக்குகிறார். மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.
இம்மாதம் 10 ஆம் தேதி படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளார் சோனா. படத்தின் நாயகி யார் என்பதையும் அன்று தெரிவிப்பாராம். ஓடு மச்சி ஓடு பெயர் அனேகமாக மாற்றப்படலாம் என்கின்றனர்.