நாடோடிகள் படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்ஃபோடைமென்ட் ராசு மதுரவன் இயக்கும் கோரிப்பாளையம் படத்தை தயாரிக்கிறது. இதையடுத்து அவர்கள் தயாரிக்கும் படத்தில் ஆதி நாயகனாக நடிக்கிறார்.
அறிமுகப்படுத்திய சாமியின் படத்துக்கே கால்ஷீட் தரவில்லை என்று ஆதி மீது அவப்பெயர் இருந்தாலும், அவரது திறமைக்கு தேடி வருகின்றன வாய்ப்புகள்.
ராம் கோபால் வர்மாவின் இரு உதவியாளர்கள் இயக்கும் படங்களில் ஆதிதான் ஹீரோ. இது தவிர சரித்திரம், அய்யனார் என ஆதி கைவசம் படங்களுக்கு பஞ்சமில்லை.
கோரிப்பாளைத்தை தயாரிக்கும் ராயப்பன் அடுத்து விஜய் பிரகாஷ் என்பவரிடம் கதை கேட்டிருக்கிறார். இவர் இயக்குனர் வி.வி.விநாயக்கின் உதவியாளர். அவர் இயக்கும் படத்தில் ஆதி ஹீரோவாக நடிக்கிறார். மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.