விஜயகாந்த் இயக்கி நடிக்கும் விருதகிரியின் கதை ஏறக்குறைய தயாராகிவிட்டது. உள்ளூர் தீவிரவாதிகளை இடது காலால் உதைத்து துரத்தியடித்த கேப்டன் இந்தமுறை உலக தீவிரவாதியை துரத்திப் பிடிக்கிறார்.
வழக்கமான விஜயகாந்த் படங்களின் அதே கள்ளன், போலீஸ் விளையாட்டுதானாம் விருதகிரியும். ஒரே வித்தியாசம், இதில் கள்ளன் உலக அளவில் இன்டர்போல், சிஐஏ போன்றவற்றால் தேடப்படும் தீவிரவாதி. அவனை விஜயகாந்த் ஒன்மேன் ஆர்மியாக சிதறடிக்கிறார்.
கதைக்கேற்ப பல வெளிநாடுகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். பட யூனிட்டுக்கு விசா வாங்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. வெளிநாடுகளில் தீவிரவாதியை துரத்திக் கொண்டே தன்னை காதலிக்கும் ஹீரோயினுடன் கேப்டன் டூயட் பாடும் காட்சிகளும் உண்டு.
கேப்டனின் இந்த எல்லை தாண்டிய பயங்கரவாதம் விரைவில் கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது.