பெயரில் விளையாட்டுத்தனம் இருந்தாலும் சீரியஸாக படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார் இயக்குனர் திரு. தனுஸ்ரீதத்தா, நீதுசந்திரா, சாரா என மூன்று வட இந்திய அழகிகள் இருந்தும் பெரிதாக கால்ஷீட் பிரச்சனை இல்லை என்பது ஆச்சரியம்.
சத்யம், தோரணை என தொடர் தோல்விகளுக்குப் பிறகு விஷால் ஒப்புக் கொண்ட படம், தீராத விளையாட்டு பிள்ளை. அதிக பில்டப் இல்லாமல் படப்பிடிப்பை தொடங்கியவர்கள் அதே வேகத்தில் வசனக் காட்சி அனைத்தையும் படமாக்கியுள்ளனர். மீதம் இருப்பவை பாடல் காட்சிகள்.
ஒரு மாதத்தில் அனைத்தையும் முடித்து பொங்கலுக்கு படத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர் விக்ரம் கிருஷ்ணா.
ஒரு பாடல் காட்சியில் நீது சந்திராவை மிளகாய் தண்ணீரில் நீந்த வைத்தார்கள். தத்தாவுக்கும், சாராவுக்கும் என்ன மாதிரி வாட்டர் ட்ரிட்மெண்ட் வைத்திருக்கிறார்களோ?