கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » நவம்பர் 6 முதல் பழசிராஜா (Pazhasiraja to release next month in Tamil)
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
மலையாளத்தில் பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்டிருக்கும் பழசிராஜா நவம்பர் மாதம் தமிழில் மொழிமாற்றம் செய்து தமிழகமெங்கும் வெளியிடப்படுகிறது.

பழசிராஜாவில் பழசி மகாராஜாவாக மம்முட்டி நடித்திருக்கிறார். அவரது நம்பிக்கைக்கு‌ரிய தளபதியாக நடித்திருப்பவர் சரத்குமார். இது அவரது முதல் மலையாளப் படம். இவர்கள் தவிர தமிழ்நாட்டுக்கு அறிமுகமான கனிகா, பத்மப்‌ரியா ஆகியோரும் படத்தில் உண்டு.

இதன் காரணமாக பழசிராஜாவை தமிழிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள். நவம்பர் 6ம் தேதி தமிழ் பழசிராஜா திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளாவில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் அங்கு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: பழசிராஜா, மொழிமாற்றம், மம்முட்டி, சரத்குமார்