கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » பாலுமகேந்திரா – சிஷ்யன் வழியில் குரு (Balumahendra next film)
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
அனல் காற்று படத்தின் தொடக்க விழா நடந்து இரண்டு வருடங்கள் ஓடிவிட்டது. இன்னும் படத்தை தொடங்காமல் இருக்கிறார் பாலுமகேந்திரா.

நாம் அறிந்த வரையில் அனல் காற்று ட்ராப்பாகி நிறைய நாட்கள் ஆகிறது. புதிய கதையை தயார் செய்து வருகிறார் பாலுமகேந்திரா.

ஆண், பெண் உறவு சிக்கல்களை மையப்படுத்தியே பெரும்பாலான படங்களை எடுத்திருக்கிறார் பாலுமகேந்திரா. முதல் முறையாக மாற்றுத்திறன் கொண்டவர்களை பற்றிய படமொன்றை இயக்க திட்டமிட்டுள்ளார்.

நான் கடவுள் படத்தில் வருவார்களே, உடல் ஊனமுற்றவர்கள். அவர்களை‌‌ப் போன்றவர்களை வைத்துதான் தனது புதிய படத்தை எடுக்க திட்டமிட்டிருக்கிறார்.

அதேநேரம், நான் கடவுள் போல அவர்களை கையாலாகாதவர்களாக சித்த‌ரிக்காமல் பாஸிடிவ்வாக காண்பிக்க இருக்கிறாராம். சமீபத்தில் உடல் ஊனமுற்றவர்களை பற்றிய படங்களை மட்டும் திரையிட்ட எபிலிட்டி பெஸ்ட் 2009 திரைப்பட விழாதான் பாலுமகேந்திராவின் இந்த புதிய கதைக்கு இன்ஸ்பிரேஷனாம்.

சீக்கிரம் படத்தை எடுங்கள். பார்க்க ஆவலாக இருக்கிறோம்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: பாலுமகேந்திரா, அனல் காற்று, நான் கடவுள், உடல் ஊனமுற்றவர்கள்