கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » சினேகாவை பாராட்டிய கமல் (Kamal appreciates Sneha)
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
வெங்கட்பிரபுவின் கோவா ஏறக்குறைய முடிந்துவிட்டது. வழக்கமான ‌ஹ‌ியூமருடன் கிளாமரும் கலந்துகட்டி அடித்திருக்கிறார்கள். படத்தைப் பார்க்க இப்போதே தவம் கிடக்கிறது இளைய சமுதாயம்.

கோவாவின் சீக்ரெட் வெப்பன் யார் தெ‌ரியுமா? வேறு யாராக இருக்க முடியும்... புன்னகை இளவரசி சினேகாதான் அந்த வெப்பன்.

படத்தில் சினேகாவுக்கு எந்த மாதி‌ரி கேரக்டர்? வில்லியா? கிளாமரா? நீச்சல் உடையில் அவர் நடித்திருக்கிறாரா? கேள்விகள்... கேள்விகள்...

இவை எல்லாவற்றுக்கும் புன்னகை மட்டுமே சினேகாவின் பதில். நீச்சல் உடை கேள்விக்கு மட்டும், அப்படியெல்லாம் நடிக்கவே மாட்டேன் என சீ‌ரியஸாக பதிலளிக்கிறார். இதுவரை பார்க்காத கிளாமரான சினேகாவை கோவாவில் பார்க்கலாம் என வெங்கட்பிரபு உத்தரவாதம் அளித்திருக்கிறார்.

சினேகாவின் எக்ஸ்ட்ரா உற்சாகத்துக்கு காரணம், கமல். சமீபத்தில் ஒரு விழாவில் சினேகாவைப் பார்த்த கமல், சினேகா இப்போ ரொம்ப அழகாயிருக்காங்க என எல்லோர் முன்பும் பாராட்டியிருக்கிறார்.

இதுபற்றி கேட்டால், டயட், உடற்பயிற்சின்னு உடம்பை ஸ்லிம்மாக்கிட்டேன். கமல் சார் அதனால்தான் பாராட்டியிருக்கணும். அவரே பாராட்டியதில் ரொம்ப சந்தோஷம் என்றார் பூ‌ரிப்புடன்.

கமல் சொன்னது நிஜம். நே‌ரில் பார்த்தால் நீங்களும் ஒத்துக்குவிங்க.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: கோவா, சினேகா, கமல், வெங்கட்பிரபு