அரசியல் என்றால் அந்தப் பக்கமே எட்டிப் பார்க்காத கமல், அரசியல்வாதிகளுக்கு நடத்தப்படும் பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
தென்னிந்திய நடிகர் சங்கம் மத்திய அமைச்சர்கள் நெப்போலியன் மற்றும் ஜெகத்ரட்சகனுக்கு பாராட்டுவிழா நடத்த முடிவு செய்துள்ளது. ஏற்கனவே நடந்து முடிந்திருக்க வேண்டிய இந்த விழா, ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மரணத்தைத் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டது.
அரசியல் சார்பற்ற நடிகர் சங்கம் ஏன் அரசியல்வாதிகளுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்?
இந்த இரு மத்திய அமைச்சர்களும் நடிகர் சங்கத்தின் மதிப்புமிகு உறுப்பினர்கள். அதனால்தான் பாரட்டு விழா நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். விரைவில் பாராட்டு விழாவுக்கான தேதியை அறிவிக்கயிருக்கிறார்கள்.