கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » சின்னக் கலைவாணரின் பெரிய கனவு
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
ஸ்டார்ட், ரெடி, ஆக்சன் சொன்ன உடனேயே சிரிக்கச் சிரிக்க தத்துவங்களும், சமுதாயத்திற்கு புத்திமதிகளும் சொல்வதில் விவேக்கிற்கு இணை இந்திய சினிமாவில் இப்போதைக்கு ஆள்கிடையாது.

ஆனால் மனிதரோ படுசீரியஸாய் ஒரு விஷயத்தில் ஈடுபட்டு வருகிறாராம். அது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அக்னிச் சிறகுகளை படமாக்குவதுதான் அந்த மெகா பிராஜக்ட்.

ஏற்கனவே கலாமை சந்தித்தும் பேட்டி எடுத்தும் அவரின் நன்மதிப்பை பெற்றிருக்கும் சின்னக் கலைவாணருக்கு நிச்சயம் பச்சைக்கொடிதான் கலாம் காட்டுவார் என்கின்றன கோடம்பாக்கத்து பட்சிகள்.

இதுகுறித்து அடிக்கடி தன்னுடைய நெருங்கிய நட்பு, தொழில் வட்டாரங்களுடன் டிஸ்கஷன் நடத்துகிறாராம் விவேக்.

காலமும், களமும் அமையுமானால் அக்னிச் சிறகுகள் முளைக்கத் தொடங்கிவிடுமாம். நாலு சீன்கள் வந்து நக்கல்ஸ், உதார்ஸ் விட்டு போகும் காமெடி டிராக்கல்ல இந்த விஷயம் என்பது விவேக்கிற்கு புரியும். அதனால்தான் ஒவ்வொரு அடியும் நிதானமாக எடுத்து வைக்க உள்ளாராம் நம் சின்னக் கலைவாணர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: விவேக், அக்னிச் சிறகுகள், கலாம்