கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » கொடி ரெடி, கொள்கைப் பாடலும் ரெடி
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
கருப்பு வெள்ளை காலம் முதலாகவே நம் கதாநாயகர்கள் நெஞ்சை விறைத்து, கையை நீட்டியபடி குதிரையிலோ, நடந்து வந்தபடியே சமுதாயத்தில் உள்ள அநியாயங்களை, கொடுமைகளை தட்டிக் கேட்டுக்கொண்டே... தான் வந்திருக்கிறார்கள்.

அந்த வழியில் விஜய்யும் தனது வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலை வைக்க அனுமதித்துள்ளார்.

அரசியல் வரவு பற்றிய சமிஞ்சைகளை தனது ரசிகர்களுக்கு தந்து கொண்டிருக்கும் இந்தப் பாட்டு வரிகள், இப்போது கோடம்பாக்கத்து டாக்காக இருக்கிறது.

விஜய்க்காக பாடலை எழுதியுள்ளவர் கபிலன். வரிகள் இதோ

வறட்டி தட்டும் சுவத்துல வேட்பாளர் முகமடா
காத்திருந்து ஓட்டுப் போட்ட கறுத்துப் போச்சு நகமடா
புள்ள தூங்குது இடுப்புல பூனை தூங்குது அடுப்புல
நம்ம நாட்டு நடப்புல யாரும் இதை தடுக்கல.

அநேகமாய் வேட்டைக்காரன் வெற்றி விழாவில் கபிலனுக்கு தங்கச் செயின் பரிசு கிடைத்தாலும் கிடைக்கும்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: விஜய், அரசியல், ரசிகர்