ஏற்கனவே கந்தசாமியின் 'தக்கையின் மீது நான்கு கண்கள்' கதையை எடுத்துள்ள வசந்த், சுந்தரராமசாமியின் 'ஒரு புளிய மரத்தின் கதை'யை கேட்டு அணுகியுள்ளார். சுராவின் கதை கிடைக்காமல் போக, அசோகமித்ரனின் 'தண்ணீர்' கதையை கையகப்ப படுத்தியிருக்கிறார்.
'தண்ணீர்' கதையை திரைப்படமாக்க விரும்பி வசந்த்திடம் சென்று கேட்டிருக்கிறது ஒரு முக்கியப்புள்ளி. 'தண்ணீர்' கதையை தர மறுத்த வசந்த். அதை தானே குறும்படமாக்குவது என்ற தீர்மானத்தில் இருக்கிறார்.
அப்படியென்ன குறும்படக் காதல் என்றால், "வணிக ரீதியான படங்களை இயக்குவதில் உள்ள ரிஸ்க் குறும்படங்களில் இல்லை என்பதால் சுதந்திரமாக செயல்பட முடிகிறது. நான் எடுத்த கமர்ஷியல் படங்களைக் கூட நாவல் மாதிரிதான் எடுத்திருப்பேன். அது ரசிகர்கள் அறிவார்கள்.
இப்போது முடிந்திருக்கும் 'விசாரணைக் கமிஷன்' நாவலைக் கூட கதையை அப்படியே படமாக்காமல் அதன் ஜீவனை மட்டுமே குறும்படமாக்கியுள்ளேன். கலைப் படைப்புகளுக்கு அதன் ஜீவன் ரொம்ப முக்கியம். அதை சரியாகச் செய்வதில்தான் ஒரு படைப்பாளியின் கடமை அடங்கியிருக்கிறது" என்றார் வசந்த்.