கோடம்பாக்கத்திற்கு என்று உள்ள சில வியாதிகளில் ஒன்று, ஒரு படம் ஹிட்டாகிவிட்டால் அதே பாணில் 10, 15 படங்களைப் போட்டுத் தாக்கிவிடுகிறார்கள். வெண்ணிலா கபடிக் குழுவில் ஆரம்பித்த வியாதி பசங்க வழியாக இப்ப பாணா காத்தாடியில் வந்து நிற்கிறது.
பாணா காத்தாடி பட்டம் விடும் இளைஞர்கள் பற்றி படமாம் (தல சுத்துதுடா சாமி). சத்யஜோதி தயாரிப்பில் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் நடிகர் முரளியின் மகன் அதர்வா கதாநாயகனாகிறார். (அதர்வாவுக்கு ஃபிரண்ட் ரோலில் முரளி நடிக்காமல் போனது நம் முன்னோர்கள் செய்த புண்ணியம்தான்).
சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார். இவர் பூக்கடை ரவி, மாஸ்கோவின் காவிரி படங்களில் நடித்து வருகிறார். ஆண்டுதோறும் சர்வதேச பட்டம்விடும் போட்டியை படமாக்கப் போகும் 'பாணா' கோஷ்டி தனது பட்டத்தை படமாக்க தாய்லாந்துக்கும் பறக்க இருக்கிறது.