வல்லமை தாராயோவிற்குப் பின் மதுமிதா இயக்கி வரும் கொல கொலயா முந்திரிக்கா, நாளொரு சீனும், பொழுதொரு டேக்குமாக வளர்ந்து வருகிறது.
தனது முதல் படத்தில் பார்த்திபனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் பத்திரிக்கை செய்திகளில் பரபரப்பாக்கப்பட்ட இயக்குனர், இந்தப் படத்தின்போது படு உஷார் பார்ட்டி ஆகிவிட்டார். எந்த கருத்துக்கும் நோ காமெண்ட்ஸ்தான் பதில்.
கொல கொலயா முந்திரிக்கா படம் முழு நீள நகைச்சுவை படம். கஞ்சா கருப்பு, வையாபுரி என ஏகத்துக்கும் நகைச்சுவை நடிகப் பட்டாளங்கள். பெரும்பகுதி ஷூட்டிங் மதுமிதாவின் சொந்த அலுவலக கட்டடமான கிரிகுஜா என்களேவ் கட்டடத்திலேயே நடந்து வருகிறது.
இதே அலுவலகத்தில் தான் மதுமிதாவின் தந்தை நடத்தும் 'தமிழக அரசியல்' பத்திரிக்கைத் தளமும் உள்ளது. அப்பா பத்திரிக்கையுலகில் கலக்க, மகள் திரையுலகில் வலம்பர யாரை யார் முந்தப் போகிறார்கள் என்பதுதான் சுவாரசியம்.
காமெடிப் படத்தில் வெற்றிபெறுவது என்பது காற்றில் கயிறு திரிப்பது மாதிரி என்பார்கள். இயக்குனர் மதுமிதா என்ன செய்யப் போகிறார். இன்னும் சில மாதத்துக்குள் தெரியத்தானே போகிறது.