வழக்கு எண் 18/7

சனி, 4 ஜூலை 2009( 18:57 IST )
படத்துக்கு பெயர் வைப்பதில் கூட இவ்வளவு தூரம் வித்தியாசம் காட்டணுமா என்ன?
இயக்குனர் லிங்குசாமியின் சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் தனது திருப்பதி பிரதர்ஸின் மூலம் தயாரிக்கும் அடுத்த படம்தான் வழக்கு எண் 18/7. காதல் பாலாஜி சக்திவேல் இயக்குகிறார்.
கதாநாயகனாக புதுமுகம் ஒருவரை அறிமுகப்படுத்த உள்ளனர். கதாநாயகியாக கன்னடத்திலிருந்து புது வரவாக பிரஜ்னா. இவர் ஏற்கனவே கன்னடப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
கன்னடத்தில் பேபி பிரஜ்னா தமிழில் குமாரி பிரஜ்னாவாவது சிறப்புச் செய்தி. ஆகஸ்டில் படப்பிடிப்பு தொடங்க உள்ள வழக்கு எண்ணுக்கு விஜய் மில்டன் ஒளிப்பதி செய்கிறார்.