கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » ஆங்கிலோ இந்தியராக நடிப்பது உறுதி – த்‌ரிஷா
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
ஆ‌க்ச‌ய்குமாருடன் இந்திப் படத்தில் நடிப்பதால் தமிழ் படங்களில் நடிக்க மறுக்கிறார் த்‌ரிஷா. ஏற்கனவே ஒப்புக் கொண்ட வெற்றிமாறனின் ஆடுகளம் படத்திலிருந்தும் விலகியிருக்கிறார். கடந்த ஒரு வாரமாக உலவி வரும் இந்த செய்தியால் த்‌ரிஷஅப்செட்.

தெலுங்கில் தொடர்ந்து இரண்டு படம் நடித்தால் தமிழை கண்டுக்கலைன்னு சொல்றாங்க. இந்தியில் நடித்தால் தமிழ், தெலுங்கை கை கழுவிட்டேன்னு புரளி கிளப்புறாங்க. இது எதுவுமே உண்மையில்லை என்றார் த்‌ரிஷா.

தெலுங்கில் ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி கோபிசந்த், வெங்கடேஷ் ஆகியோருடன் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். அதேபோல் விண்ணைத் தாண்டி வருவாயா, ஆடுகளம் படத்திலும் நடிக்கிறாராம். வெற்றிமாறனின் ஆடுகளம் படத்திலிருந்து த்‌ரிஷவிலகுவதாக வந்த செய்திகளில் உண்மையில்லையாம்.

இந்தப் படத்தில் ஆங்கிலோ இந்தியராக வருகிறார் த்‌ரிஷா. இந்த வேடத்துக்காக சுருட்டை தலைமுடி, கா‌ண்டாக்ட் லென்ஸ் என முதல் முறையாக கெட்டப் மாற்றும் ஐடியாவில் இருந்தார் த்‌ரிஷா. இந்நிலையில் படத்தில் நடிக்கவில்லை என்று வந்த செய்தி அவரை ரொம்பவே பாதித்திருக்கிறது. நல்ல கேரக்டர் கண்டிப்பாக நடிப்பேன் என்றார் உறுதியாக.

இது ஒருபுறமிருக்க, இந்திப் படத்துக்கு த்‌ரிஷதொடர்ச்சியாக கால்ஷீட் கொடுத்திருப்பதால் ஆடுகளத்தில் நடிக்க முடியுமா என்ற சந்தேகம் தயா‌ரிப்பாளருக்கு இருக்கிறது. அதனால், வேறு ஹீரோயின் தேடி வருவதாகவும் தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. பொல்லாதவனை தயா‌ரித்த கதிரேசனே ஆடுகளத்தையும் தயா‌ரித்து வருகிறார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: த்ரிஷா, ஆடுகளம், ஆங்கிலோ இந்தியன்