அட, சங்கரா...

வெள்ளி, 3 ஜூலை 2009( 16:10 IST )
அட, சங்கரான்னு தலையில கை வைக்கிற மாதிரி ஒரு காட்சியை சங்கரா படத்துக்காக சமீபத்தில் எடுத்தார் இயக்குனர் ராஜ்கண்ணன். அது என்ன காட்சின்னு சொல்றதுக்கு முன்னால் இயக்குனரைப் பற்றி ஒரு வார்த்தை.
நெஞ்சைத்தொடுன்னு ஒரு படம் வந்ததே நினைவிருக்கிறதா? லட்சுமிராயை புதுமுகம் ஜெமினியோடு உதட்டோடு உதடு முத்தம் கொடுக்க வைத்து, லட்சுமிராயின் முத்த எபிசோடுக்கு முதல்படி போட்டுக் கொடுத்தவர் சாட்சாத் ராஜ்கண்ணனேதான். இவரது அடுத்தப் படம் சங்கரா.
வாசன் கார்த்திக் ஹீரோ. அர்ச்சனா, ஸ்டெபி என்று இரண்டு ஹீரோயின்கள். இவர்கள் இருவருக்குமே வாசன் கார்த்திக் மீது காதல். சரியாகச் சொல்வதென்றால் காமம். ஹீரோவை கட்டிலில் சாய்க்க ஹீரோயின்கள் இருவரும் திட்டம் போடுகிறார்கள். இந்த கெட்ட காட்சியைதான் சமீபத்தில் படமாக்கினார் ராஜ்கண்ணன்.
படத்தின் கதை என்ன என்று கேட்டால், எல்லாம் யூத் சப்ஜெக்ட்தான் என்று பதில் வருகிறது இயக்குனரிடமிருந்து. பாடல் காட்சிகளில் கவர்ச்சியின் எல்லையை தொட்டிருக்கிறார்களாம் இரு கதாநாயகிகளும். எப்படியும் முந்தையப் படத்தைப் போல ஏ சான்றிதழ் வாங்கிவிடுவார் என்பது மட்டும் உறுதி.