கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » கவுரவ வேடத்தில் பிரசன்னா
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
ஆ‌க்சன் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடிப்பவர்கள் மத்தியில் பிரசன்னா வித்தியாசமானவர். அஞ்சாதே படத்தின் செக்ஸ்மேனியாக் வில்லன் வேடத்தை விரும்பி கேட்டு நடித்தார். நாணயம் படத்தில் சிபி வில்லன், இவர் ஹீரோ.

சோலோ ஹீரோவாக நடித்து வரும் பிரசன்னா, முரளியின் மகன் அதர்வா ஹீரோவாக அறிமுகமாகும் பாணா காத்தாடி படத்தில் சின்ன வேடம் ஒன்றில் நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயா‌ரிக்கும் இந்தப் படத்தில் மாஸ்கோவின் காவி‌ி பட ஹீரோயின் சமந்தா அதர்வா ஜோடியாக நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜஇசை.

திடீரென கவுரவ வேடத்தில் பிரசன்னா நடிக்க என்ன காரணம்? கேரக்டர் பிடித்திருந்தது ஒரு காரணம். இன்னொரு காரணம், சத்யஜோதி பிலிம்ஸ் தயா‌ரிக்கும் அடுத்தப் படத்தில் பிரசன்னா ஹீரோவாக நடிக்கிறார். திரைப்பட கல்லூ‌ரியைச் சேர்ந்த ராஜமித்ரன் படத்தை இயக்குகிறார். படத்துக்கு வாணா என்று பெயர் வைத்துள்ளனர்.

சத்யஜோதி பிலிம்ஸின் தயா‌ரிப்பில் ஹீரோவாக நடிப்பதாலேயே அவர்களின் பாணா காத்தாடியில் சின்ன வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் பிரசன்னா. கவுரவ வேடம் என்றால் அதன் பின்னணியில் ஒரு காரணமும் இருக்கவே செய்கிறது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: பிரசன்னா, வாணா, பாணா காத்தாடி