டேனியல் பாலாஜியை பார்க்கும் அத்தனை கண்களிலும் பொறாமை. இந்த கருப்பு வில்லனைப் பார்த்து கலவரப்பட என்ன இருக்கிறது?
காக்க காக்க படத்தில் அறிமுகமான டேனியல் பாலாஜி எண்ணி நாலே படத்தில்தான் நடித்திருப்பார். அதற்குள் கதாநாயகன் பிரமோஷன். அதுவும் லட்சுமிராய் ஜோடியாக. முத்திரையில் லட்சுமிராய்க்கு அழுத்தமாக முத்தம் வேறு கொடுத்திருக்கிறார். பொறாமை வராமல் இருந்தால்தானே ஆச்சரியம்?
படமே இல்லாவிட்டாலும் ஒரே மாதிரி நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் டேனியல். வில்லனாக நடித்துக் கொண்டிருந்தவர் முத்திரையில் கதாநாயகன் வாய்ப்பு கிடைத்ததும் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு இந்த வெரைட்டி மோகம்தான் காரணமாம்.
சரி, இனி ஹீரோவாக நடிப்பீர்களா அல்லது வில்லனாக தொடர்வீர்களா?
ஒரு படம் வில்லன் ஒரு படம் ஹீரோ என்று பிஃப்டி பிஃப்டி சாய்ஸில் நடிக்கப் போகிறாராம். வில்லனோ, ஹீரோவோ... தொடர்ந்து ஒரேவிதமாக நடித்தால் போரடித்துவிடும் என்பதால் இந்த புது முடிவு.
“நாலு வில்லன் ஐந்து வில்லன்கள் வருகிற படங்களில் ஐந்தாவது வில்லனா நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை. சர்வத்தில் ஜே.டி.சக்ரவர்த்தி நடித்த மாதிரி சோலோ வில்லன் என்றால் ஓகே. அந்த மாதிரி நடிப்புக்கு ஸ்கோப் உள்ள படங்களில் மட்டுமே வில்லனா நடிப்பதுன்னு முடிவு பண்ணியிருக்கேன்.”
டேனியலின் இந்த பிப்ஃடி பிஃப்டி ஆஃபருக்கு ஆதரவு இருக்கிறதா என்பது அவர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையிலிருந்து தெரிந்துவிடும்.