கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » சமுத்திரக்கனியின் புதிய படம்
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
நாடோடிகள் மூலம் நம்பிக்கைக்கு‌ரிய இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் சமுத்திரக்கனி. அவரது படத்தை தயா‌ரிக்க க்யூ கட்டி நிற்கிறார்கள் தயா‌ரிப்பாளர்கள்.

நாடோடிகள் படத்தை தயா‌ரித்த எஸ்.மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்ஃபோடெக் நிறுவனத்துக்காக மேலுமொரு படத்தை இயக்குகிறார் சமுத்திரக்கனி. அவரது அடுத்தப் படமாக இது இருக்கும்.

இந்தப் படத்தில் இயக்குனர் சேரன் ஹீரோவாக நடிக்கிறார். நாடோடிகள் படத்தில் சசிகுமார் நடித்த வேடத்தில் முதலில் நடிப்பதாக இருந்தவர் சேரன். சில காரணங்களால் அது முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

சேரன் நடிக்கும் படத்தை அடுத்து சமுத்திரக்கனி இயக்கும் படத்தில் சசிகுமார் ஹீரோ. தயா‌ரிப்பாளர் இன்னும் முடிவாகவில்லை.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: நாடோடிகள், சமுத்திரக்கனி, சேரன், ஹீரோ