நல்ல கதைகள் வந்தால் அடுத்தவர் இயக்கத்திலும் நடிப்பது என்ற தனது கொள்கையை தளர்த்தாமலிருக்கிறார் சேரன். தற்போது தனது பொக்கிஷம் படத்தில் நடித்து வருகிறவர் வேறு இயக்குனர்களிடமும் நடிப்பதற்கு கதை கேட்டு வருகிறார்.
அமைதியான தமிழ் முகம் தேவையென்றால் இயக்குனர்களின் மனதில் நிழலாடும் பெயர் சேரன். சில ஹீரோக்களைப் போல கண்டெய்னரில்தான் சம்பளம் வாங்குவேன் என்றெல்லாம் சேரன் அடம்பிடிப்பதில்லை. அவரை மற்றவர்களுக்கு பிடிக்க இதுவும் ஒரு காரணம்.
பொக்கிஷத்துக்குப் பிறகு மிஷ்கின் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சேரன். அவரிடம் கதை சொல்லியிருக்கும் இன்னொருவர் மாயாண்டி குடும்பத்தார் இயக்குனர் இராசுமதுரவன்.
கோரிப்பாளைம் பட வேலைகளில் பிஸியாக இருக்கும் இராசுமதுரவன், சேரனிடம் கதையொன்றை கூறியிருக்கிறார். சேரனுக்கு கதை பிடித்திருக்கிறது. கோரிப்பாளைத்துக்குப் பிறகு இராசுமதுரவன் இயக்கும் படம் இதுவாக இருக்கும்.