கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » ஆர்.கே.யின் அழகர் மலை
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
ஆர்.கே. நடித்திருக்கும் அழகர் மலை இந்த மாதம் திரைக்கு வருகிறது. காதலுக்கு ம‌ரியாதை படத்துக்குப் பிறகு இளையராஜா, சங்கிலி முருகன் இணையும் படம் என்பதால் விநியோகஸ்தர்கள் மத்தியிலும் படம் குறித்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அழகர் மலையில் ஆர்.கே.க்கு இரண்டு வேடம். கிராமத்து வெகுளியாகவும், ரவுடியாகவும் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடி தாமிரபரணி பானு. கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை எஸ்.பி.ரா‌ஜ்குமார் இயக்கியிருக்கிறார்.

பொதுவாக ஐந்து நாள் கால்ஷீட்டுடன் ஒதுங்கிக் கொள்ளும் வடிவேலு, இந்தப் படத்துக்கு இருபது நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். ஹீரோ ஆர்.கே.க்கு இணையான வேடத்தில் காமெடியில் கலக்கியிருக்கிறாராம் வைகைப் புயல்.

இவர்களுடன் நெப்போலியன், மணிவண்ணன், லால், சரவணன், சுகன்யா, சோனா ஆகியோரும் நடித்துள்ளனர்.

விஜய்யின் ஐம்பதாவது படத்தை சங்கிலி முருகன் தயா‌ரிப்பது தெ‌ரியும். உ‌ரிமைக் குரல் என பெயர் வைத்திருக்கும் அப்படத்தின் கதை எஸ்.பி.ரா‌ஜ்குமாருடையது. படத்தை ரா‌ஜ்குமாரே இயக்குவார் என்றும் தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. அழகர் மலை வெற்றி பெற்றால் விஜய்யின் ஐம்பதாவது படத்தை இயக்கும் வாய்ப்பு ரா‌ஜ்குமாருக்கு பிரகாசமடையும்.

படத்தின் வெளியீட்டு தேதியையும், படம் வெளியாகும் திரையரங்குகளையும் முடிவு செய்வதில் பிஸியாக இருக்கிறார் தயா‌ரிப்பாளர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: ஆர்கே, அழகர் மலை, இளையராஜா, சங்கிலி முருகன்