கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » உஷார் உதயதாரா
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
தீநகர் படத்தில் அறிமுகமானபோதே தீ மாதி‌ி தான் இருந்தார் உதயதாரா. தன்னிடம் காதல் என்று வழிந்த அப்பட இயக்குனரை, போலீஸை வச்சு பின்னிடுவேன் என்று பயமுறுத்தியவர். புதுசா ஒரு படம் ஒப்பந்தம் ஆகும்போது எப்படி உஷாராக இருப்பார் என்பதை சொல்லத் தேவையில்லை.

சனுஜநடிப்பதாக இருந்த பயம் அறியான் படத்தில் அவருக்கு பதில் உதயதாராவை ஒப்பந்தம் செய்துள்ளனர். சனுஜாவுக்கு நடிக்க தெ‌ரியலை என்றுதான் இந்த மாற்றத்தை செய்தார் படத்தின் இயக்குனர். இந்த மாற்றத்தை ஆச்ச‌ரியமாக பார்க்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

சனுஜநடித்த ஒன்றிரண்டு காட்சிகளில் முத்தக் காட்சியும் ஒன்று. இந்த முத்த ஸ்டில்கள் பத்தி‌ரிகைகளிலும் வெளிவந்தன. உதயதாராவோ முத்தத்தை விடுத்து முந்தானை விலகிய மாதி‌ி நடிக்கவே முரண்டு பிடிக்கிறவர். அவரை வைத்து எப்படி முத்தக் காட்சி எடுக்கப் போகிறார்கள்?

இந்த இடத்தில்தான் நிற்கிறார் உதயதாரா. படத்தில் ஒப்பந்தம் ஆன பிறகு முத்தக் காட்சியில் நடிக்க வற்புறுத்தக் கூடாது என்பதற்காக, ஒப்பந்தத்தில் கையெழுத்து போடும்போதே முத்தமெல்லாம் தர முடியாது என கறாராக கூறியிருக்கிறார். அவசர தேவைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டவர் என்பதால் இயக்குனர் தரப்பும் முத்த விஷயத்தில் முரண்டு பிடிக்கவில்லையாம். மொத்தத்தில் இழப்பு ரசிகர்களுக்கு.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: உதயதாரா, தீநகர், பயம் அறியான், முத்தக் காட்சி