கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » நமிதாவின் காதல் கதை
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
அழகான பொண்ணுதான் என்று டைட்டில் வைத்ததுக்குப் பதில் நமிதாவின் காதல் கதை என்றே பெயர் வைத்திருக்கலாம். படத்தின் கதை என்ன என்று நாம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களிலிருந்து எழுந்த எண்ணம் இது.

கே சினிமா சார்பில் கே.கேசவன் தயா‌ரிக்கும் படம் அழகான பொண்ணுதான். நமிதா ஹீரோயின். ஹீரோ பதினெட்டு வயசே நிரம்பிய ராஜகார்த்திக். காதல்தான் படத்தின் மையக்கரு.

பன்னிரெண்டாம் வகுப்பு ப‌ரிட்சை முடிந்து கிராமத்துக்கு விடுமுறைக்காக வருகிறார் ராஜகார்த்திக். அங்கு அழகான நமிதாவைப் பார்த்ததும் அவருள் காதல் பீ‌ரிடுகிறது. இந்த வடலை காதலை நமிதா ஏற்றுக் கொண்டாரா இல்லையா என்பதே படத்தின் கதை.

ஆதிவாசி பெண்ணான நமிதாவின் அழகை வர்ணிக்கும் ஒரு பாடலை உருக வைக்கும் மெட்டில் இசையமைத்திருக்கிறார் சுந்தர் சி.பாபு. பாடல் இப்படி தொடங்குகிறது. வானத்தின் நிலவுக்கு கறை அழகு... கன்னத்தில் விழுந்த குழி அழகு... ஆள் தின்னும் வளைவுகள் உனதழகு... நீ அழகான பொண்ணுதான்...

சென்சா‌ரின் கத்தி‌ரிக்கு தப்பி வந்தால் நமிதாவின் மாஸ்டர் பீஸ் கவர்ச்சியை இதில் த‌ரிசிக்கலாம். இந்த மாதம் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டிருக்கிறார் தயா‌ரிப்பாளர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: நமிதா, காதல் கதை, அழகான பொண்ணுதான்