கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » தம்பி வெட்டோத்தி சுந்தரத்துக்கு மிரட்டல்
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
ஜெ.செந்தில் தயா‌ரிப்பில் வடிவுடையான் இயக்கும் படம் தம்பி வெட்டோத்தி சுந்தரம். ஸ்ரீகாந்த் நடிப்பில் நாஞ்சில் ஐந்தாம் திசை என்று தொடங்கப்பட்ட படம்தான் கரண் நடிப்பில் தம்பி வெட்டோத்தி சுந்தரமாக மாறியிருக்கிறது.

தமிழ்நாட்டிலிருந்து நாஞ்சில் - கேரளா எல்லையான களியக்காவிளை வழியாக அ‌ரிசி கடத்துவது சதாராண விஷயம். தொண்ணூறுகளில் இந்த அ‌ரிசி கடத்தல் கொடிகட்டி பறந்தது. அந்த கடத்தல்காரர்களில் பலர் சாகஸக்காரர்களாக கொண்டாடப்பட்டதும் உண்டு.

இந்த நிஜத்தின் பின்னணியில் தம்பி வெட்டோத்தி சுந்தரத்தை எடுத்து வருகிறார் வடிவுடையான். இவரது படத்தில் ஐந்து முக்கிய கதாபாத்திரங்கள் இடம்பெறுகின்றன. கரண் நடிக்கும் சுந்தரம் எனும் கதாபாத்திரம், சரவணன் நடிக்கும் சால, காதல் தண்டபாணி நடிக்கும் மணி, தயா‌ரிப்பாளர் ஜெ.எஸ். நடிக்கும் சிலுவை என்ற கதாபாத்திரம், ஹீரோயின் அஞ்சலியின் லூ‌ர்துமோ‌ரி கதாபாத்திரம்.

இந்த ஐந்து கதாபாத்திரங்களும் கற்பனை கலக்காத நிஜ மனிதர்கள். சிலர் இன்றும் உயிருடன் இருக்கிறார்கள். இதுதான் வடிவுடையானுக்கு புதிய தலைவலியாக உருவெடுத்திருக்கிறது.

தம்பி வெட்டோத்தி சுந்தரத்தை வெளியிடக் கூடாது என மிரட்டல்கள் வருகிறதாம் வடிவுடையானுக்கு. ஆனால் அதையெல்லாம் அவர் பொருட்படுத்துவதாக இல்லை. நான் ஸ்கூல்ல படிக்கி காலத்தில் எனக்குள்ள பாதிப்பை ஏற்படுத்தின சம்பவங்கள் இவை. இதை படமாக்க யாருக்கும் பயப்படப் போறதில்லை என்றார் உறுதியாக.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: தம்பி வெட்டோத்தி சுந்தரத்துக்கு மிரட்டல்