கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » மெட்ராஸ் டாக்கீஸில் சசிகுமார்?
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் படத்தை சசிகுமார் இயக்குகிறார். கோடம்பாக்கத்தில் எங்கு திரும்பினாலும் இதுதான் பேச்சு. அப்படி என்ன நடந்தது?

தனது ராவணன் படப்பிடிப்புக்கு ஓய்வு கொடுத்த மணிரத்னம், சென்னை வந்ததும் ஃபோர் பிரேம் திரையரங்கில் சசிகுமாரின் சுப்ரமணியபுரம் படத்தை பார்த்தார். படத்தில் மனதை பறிகொடுத்தவர், உடனடியாக சசிகுமாரை தொடர்பு கொண்டு அவரை பாராட்டியிருக்கிறார். குறிப்பாக, நேரம் கிடைக்கும்போது தன்னை வந்து சந்திக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

பாராட்டு தெரிவித்தவர் நேரில் பார்க்க வேண்டும் என்று கூறியது தனது மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் படம் இயக்குவதற்குதான் என்கிறார்கள் கோலிவுட்டில்.

சமுத்திரக்கனியின் நாடோடிகள் படப்பிடிப்பல் பிஸியாக இருக்கும் சசிகுமார் இது குறித்து மவுனம் சாதித்து வருவது வதந்திக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: மெட்ராஸ் டாக்கீஸ் சசிகுமார் மணிரத்னம் சுப்ரமணியபுரம்