கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » நான் கடவுளுக்கு யு/ஏ
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
3 வருடங்களாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை‌தூண்டிய பாலாவின் நான் கடவுள் இந்த மாதம் வெளியாகிறது. நேற்று நடந்த பாடல்கள் வெளியீட்டு விழா, படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் (31.12.2008) நான் கடவுள் படம் சென்சார் உறுப்பினர்களுக்காக திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பெற்றோர் துணையுடன் பார்க்கத்தகுந்த யு/ஏ சான்றிதழ் வழங்கினர்.

ஆபாசத்தில் நம்பிக்கையில்லாத பாலாவின் நான் கடவுளுக்கு யு/ஏ சான்றிதழ் வழங்க காரணம் படத்தில் இடம்பெற்றுள்ள சண்டைக் காட்சிகள். கிளைமாக்ஸ் சண்டையை மடடும் பல நாட்களுக்கு படமாக்கியுள்ளனர்.

மேலும், சண்டைக் காட்சிகளில் நடித்த ஆர்யா உள்பட அனைவருக்கும் ரத்தக் காயம் ஏற்படும் அளவுக்கு தத்ரூபமாக எடுத்துள்ளனர். இந்த ஆ‌க்சன் காட்சிகளின் காரணமாகவே நான் கடவுளுக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது சென்சார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: பாலா நான் கடவுள் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்சார் ஆர்யா