கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » நயன்தாராவின் முரட்டு தம்பி
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
நயன்தாரா தமிழில் நடிக்காமல் விட்ட இடைவெளியை வெற்றிகரமாக நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள் டப்பிங் பட தயாரிப்பாளர்கள்.

பில்லா, சத்யம் படங்களை‌த் தொடர்ந்து நயன்தாராவின் கவர்ச்சிக்கு தமிழ்நாட்டில் மவுசு அதிகரித்துள்ளது. இதனை மோப்பம் பிடித்த சிலர் நயன்தாரா தெலுங்கில் நடித்த படங்களை மொழிமாற்றம் செய்து வெளியிடுவதில் முனைப்புகாட்டி வருகின்றனர்.

நயன்தாரா, ரவி தேஜா இணைந்து நடித்த துபாய் சீனு, துபாய் ராணி என்ற பெயரில் தமிழ்ப் பேசப் போகிறது. இதனைத் தொடர்ந்து நயன்தாராவின் இன்னொரு படமான யோகியும் தமிழில் வெளியாகிறது.

பிரபாஸ் ஜோடியாக நயன்தாரா நடித்திருந்த யோகியை வி.வி. விநாயக் இயக்கியிருந்தார். தமிழில் முரட்டு தம்பி என்ற பெயரில் இப்படம் வெளியாகிறது.

நயன்தாராவுடன் மூமைத்கானும் போட்டி போட்டு கவர்ச்சி காட்டியிருப்பதால் போட்ட பணம் திரும்ப கிடைத்துவிடும் என்பதில் சந்தேகம் இல்லாமல் இருக்கிறது தயாரிப்பாளர் தரப்பு.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: நயன்தாரா முரட்டு தம்பி டப்பிங் கவர்ச்சி துபாய் ராணி