கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » ஜாக்குவாரின் இந்தியன்
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
மகன் விஜய சிரஞ்சீவியை சூர்யா படத்தின் முலம் கலைத்துறைக்கு அர்ப்பணித்த ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கத்தின் அடுத்த அதிரடி, இந்தியன்.

சூர்யா வணிக ரீதியாக சுமார் என்றாலும், ஆக்­ஷன் காட்சிகளால் விஜய சிரஞ்சீவிக்கு நல்ல பெயர். உலகின் அனைத்து இடங்களிலிருந்தும் மகனுக்கு வாழ்த்துகள் குவிவதாக பூரிக்கிறார், ஜாக்குவார். அதே சூட்டுடன் அடுத்தப் படத்தை தயாரித்து, இயக்கி வெளியிட முடிவு செய்துள்ளார்.

புதிய படத்தின் பெயர், இந்தியன். ­ஷங்கரின் இந்தியனுக்கும் இதற்கும் கதை ரீதியாக எந்த ஒற்றுமையும் கிடையாது என்றாலும் இதுவும் தேசபக்தியை ஊட்டும் படம்தானாம்.

ஆக­ஷன் கிங் அர்ஜுனுக்கு வாழ்வளித்த தேசபக்தி, அவரைப் போலவே அடிதடியில் தனி ஆவர்த்தனம் காட்டும் விஜய சிரஞ்சீவிக்கும் கை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: விஜய சிரஞ்சீவி சூர்யா ஜாக்குவார் தங்கம் இந்தியன்