கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » குறும்பட இயக்குன‌ரின் கரகம்
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
குறும்படங்களை இயக்குவது முழு நீள படங்களை இயக்குவதற்கான விசிட்டிங் கார்ட். குறும்பட இயக்குனர்கள் பலர் பியூச்சர் பிலிம் இயக்கி வருகிறார்கள். கரகம் படத்தை இயக்கும் ல‌க்‌ஷ‌்மண்ராஜும் அப்படியே.

கரகாட்டக்காரன் வெளிவந்து 15 வருடங்கள் இருக்குமா? இல்லை, 18 வருடம் முடிகிறது. அந்தப் படத்துக்குப் பிறகு கரகத்தின் மகிமை கூறும் படமாக வெளிவர இருக்கிறது கரகம்.

சந்தோஷ் பாண்டியன், ஸ்ரீநிஷா, அஸ்விதா என்ற மூன்று புதுமுகங்கள்தான் படத்தின் ஹீரோ, ஹீரோயின். ராமராஜன் படங்களுக்கு இசையமைத்த விஜயராஜேஷ்கண்ணா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். பாடல்கள் எப்படி என்பதற்கு ஒரு சின்ன சாம்பிள்.

ஒண்ணுங்கிறானே
ரெண்டுங்கிறானே
ஒன்னோட என்னை சேத்தா
மூணுங்கிறானே..

இந்தப் பாடலுக்கு ‌நிஷநடனம் ஆடியிருக்கிறார்.

எஸ்.கே.எஸ். மீடியாஸ் சார்பில் மூக்கையா பாண்டியன் படத்தை தயா‌ரிக்கிறார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: குறும்படம் கரகம் இயக்குனர் எஸ்கேஎஸ் மீடியாஸ்