கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » சூர்யா, விக்ரம் - சூப்பர் ஹீரோக்கள்
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
நடிகர்களின் சிக்ஸ் பேக் மோகம் சூப்பர் ஹீரோ கதை மீது திரும்பியிருக்கிறது.

விக்ரம் நடித்துவரும் கந்தசாமி தண்ணீர் பிரச்சனையை பேசுகிற படம் என்றாலும் பேசுகிறவிதம் தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புது விதமாம். இதில் சூப்பர் ஹீரோவாக வருகிறாராம் சீயான்.

சூப்பர் ஹீரோ என்றாலே கிராபிக்ஸ்தானே. ஒரு மணிநேர கிராபிக்ஸுக்கு கோடிகளை அள்ளி இறைத்திருக்கிறாராம், தயா‌ரிப்பாளர் தாணு. அப்படி படத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை அறிய ஏப்.14 வரை காத்திருக்க வேண்டும்.

அயன் படத்துக்குப் பிறகு ஹ‌ி இயக்கத்தில் சிங்கம். அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ அவதாரம். இதுதான் நடிகர் சூர்யாவின் 2009 பிளான்.

பெ‌ரிய நடிகர்களை பெ‌ரிய பட்ஜெட்டில் இயக்கும்போது காம்ப்ரமைஸ் பண்ண வேண்டி வருமே என்று மிஷ்கினிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில், கதைக்காகதான் பெ‌ரிய பட்ஜெட், பெ‌ரிய நடிகர் எல்லாம். அதனால் நோ காம்ப்ரமைஸ்.

சூப்பர் ஹீரோ கதையில் நடிக்க மற்ற எல்லோரையும்விட ஆவலாக இருந்தவர், விஷால். சத்யம் காலைவா‌ரியதால் ஆவலை அடக்கி அய்யப்பன் இயக்கத்தில் மீடியம் பட்ஜெட்டில் நடிக்க தயாராகி வருகிறார். ஆனாலும் மழைக்குப்பின் தூவானமாக இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது இவ‌ரின் சூப்பர் ஹீரோ ஆசை.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: சூர்யா, விக்ரம் சூப்பர் ஹீரோ