கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » முதலிடத்தில் சரோஜா!
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
வெங்கட்பிரபுவின் எக்ஸ்பெ‌ரிமெண்ட் படமான சரோஜஅனைத்து இடங்களிலும் பிக்கப்பாகியுள்ளது.

சென்னையில் தாம் தூம் படத்திற்கு அடுத்த இடத்தில் இருந்த இப்படம் இரண்டாவது வார இறுதியில் முதலிடத்தை பிடித்துள்ளது.

சென்னையில் மட்டும் இதுவரை ஒரு கோடிக்கு மேல் வசூலித்துள்ள தாம்தூம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. மூன்றாம் இடத்தில் ராமன் தேடிய சீதை.

சேரனின் இந்தப் படத்திற்கு பெண்களின் கூட்டம் அதிக அளவில் வருவதால் வரும் நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் இப்படம் முன்னேற வாய்ப்புள்ளது.

இயக்குனர் விஜயின் பொய் சொல்ல போறோம் நான்காவது இடத்தை‌ப் பிடித்துள்ளது. ஐந்தாவது இடம் வினயின் ஜெயம் கொண்டான் படத்துக்கு. தமிழகம் முழுவதும் சென்னை பாக்ஸ் ஆஃபிஸையே பிரதிபலிக்கின்றன.

நூறு நாட்களை கடந்த பின்பும் கமலின் தசாவதாரம் டாப் டென்னில் இடம் பிடித்துள்ளது இந்த வருடத்தின் ஆச்ச‌ரியம்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: சரோஜா வெங்கட்பிரபு சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்