கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » கேரளாவை முற்றுகையிடும் இயக்குனர்!
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
புது ஹீரோயின் தேவை என்றால் நமது இயக்குனர்கள் கண்ணை மூடிக்கொண்டு கேரளாவில்தான் போய் நிற்கிறார்கள்.

ஆரம்பத்தில் பாரதிராஜா தன் 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் ராதாவை அறிமுகம் செய்தார். அதற்குப் பின் பாக்யராஜ் கேரளாவைச் சேர்ந்த ஊர்வசி, கல்பனா போன்றவர்களை கூட்டிவந்தார்.

அதேபோல், சேரன் தன் ஆட்டோகிராஃப் படத்துக்காக கோபிகாவை அறிமுகம் செய்தார். இப்படி அறிமுகமான அஸின், சந்தியா, பாவனா இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்போது அதே கேரளாவில் நாயகியைத் தேடிக் கொண்டிருக்கிறார் இயக்குனர் சமுத்திரக்கனி. இவர் தற்போது இயக்கப் போகும் படம் 'நாடோடிகள்'. இதில் சுப்ரமணியபுரம் சசிகுமார் ஹீரோவாக நடிக்கிறார்.

இவருக்கும், தமிழ் கலாச்சாரத்துக்கும் ஏற்ற முகத்தை தேடிக் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட பெண் கிடைத்துவிட்டால் உடனே படப்பிடிப்புக்கு கிளம்பி விடுவாறாம்.

உங்களுக்கும் கேரளப் பெண்கள் பிடித்துவிட்டார்களா? என்றால், தமிழ்ப் பெண்களுக்கும், கேரளப் பெண்களுக்கும் என்றும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதால்தான் இங்கு வந்து நாயகியைத் தேடிக் கொண்டிருக்கிறேன் என்கிறார்.

சசியை ஹீரோவாக நடிக்க வைப்பது நன்றிக்கடனா என்றால்... சசி நல்ல நடிகன், நல்ல இயக்குனர் என்கிறார் சமுத்திரக்கனி.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: கேரளா இயக்குனர் சமுத்திரக்கனி நாடோடிகள்