கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » மீண்டும் ஒரு ரீ-மேக்!
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
நிஜம் எது போலி எது? கொஞ்ச நாளில் திணறப் போகிறது திரையுலகம். பழைய படங்களை ரீ-மேக் செய்யும் பட்டியலை நீளவாக்கில் எழுதினால் கோடம்பாக்கத்திலிருந்து பொள்ளாச்சி வரை வரும்.

எண்பத்தி ஒன்றில் வெளியாகி, தமிழ் சினிமாவின் லகானை சற்று திருப்பி வைத்த படம் பாலைவனச் சோலை. சந்திரசேகரின் டாப் டென் பட்டியலில் பாலைவனச் சோலைக்கு எப்போதும் இடம் உண்டு.

ராபர்ட் ராஜசேகரன் இயக்கிய இந்தப் படத்தை ரீ-மேக் செய்கிறார் இயக்குனர் எஸ். தயாளன். பணம் போட பசையுள்ள பார்ட்டியும் தயாராக இருக்கிறாராம். ஒன்றே ஒன்றுதான் உறுத்தல். சந்திரசேகர், தியாகு நடித்த வேடங்களில் புதுமுகங்கள் நடிக்கிறார்களாம்.

சோலையை சீரழித்துவிட மாட்டார்களே?
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: ரீமேக் பாலைவனச் சோலை