கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » ஹீரோ பஞ்சத்தில் சினேகா படம்!
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
ஹீரோயின் ஓரியண்ட் படங்களுக்கு இது ஒரு சிக்கல். வில்லன்களை உதைப்பது முதல் நீதியை நிலைநாட்டுவது வரை எல்லா வேலைகளையும் ஹீரோயின்கள் பார்த்துக் கொண்டாலும் பக்கவாத்தியமாக ஒரு டம்மி ஹீரோ தேவை. இதற்கென்றே ராஜா மாதிரியான நடிகர்களை 'வளர்த்து' வந்தது திரையுலகம். இப்போது டம்மிகளுக்கு பஞ்சம்.

வைஜெயந்தி ஐ.பி.எஸ்.ஸின் ரீ-மேக்கான பவானியில் காக்கி சட்டையில் வில்லன்களை குமுறி எடுக்க இருக்கிறார் சினேகா. அவரது ஆ‌க்சனை அருகிலிருந்து வேடிக்கை பார்க்க ஒரு ஹீரோ தேவை.

தமிழில் நேற்று முளைத்த நடிகரும் முஷ்டி மடக்கி முன்னூறு பேரை ஒரே அடியில் நொறுக்கிக் கொண்டிருப்பதால், வேடிக்கை பார்க்கும் ஹீரோவுக்கு கடும் பஞ்சம். இதனால் பவானியில் இயக்குனர் ஆர்த்திகுமார் வலையை கேரளா பக்கம் வீசியிருக்கிறார். டம்பி சிக்கினாலும் சிக்கலாம்!
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: ஹீரோ சினேகா படம்