கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » மிரட்டுகிறார்கள்... இயக்குனர் புகார்!
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
முகம் தெரியாதவன் எல்லாம் போனில் மிரட்டுகிறான். முகம் வெளிறிப்போய் சொன்னார் தனம் இயக்குனர் ஜி. சிவா.

தனத்தில் பிராமண சமூகத்தை விமர்சனத்துக்கு உட்படுத்தியிருந்தார் சிவா. மூடத்தனத்தின் மொத்த உருவமான பிராமண குடும்பம், ஜோஸியத்தை நம்பி சங்கீதாவின் குழந்தையைக் கொல்கிறது. குழந்தையைக் கொன்றவர்களை சங்கீதா சாப்பாட்டில் விஷம் வைத்து கொல்கிறார்.

இதெல்லாம் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களை உசுப்பிவிட, அவர்களில் சிலரே கொலை மிரட்டல் விடுகிறார்கள் என்பது சிவாவின் எண்ணம்.

தனம் வெளியாகும் முன்பும் இதுபோன்ற மிரட்டலை சந்தித்தார் சிவா. தாசி குலத்தை இழிவுப்படுத்துகிறாயா என்று அப்போது மிரட்டியவர்கள் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

படம் எடுத்து மத்தளத்துக்கு நடுவில் மாட்டிக் கொண்டுள்ளார் சிவா. சிவ... சிவா... என்று சொல்வதைத் தவிர வேறென்ன சொல்ல!
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: இயக்குனர் ஜி சிவா தனம்