காட்சிக்கு காட்சி காமெடியுடன் தயாராகி வருகிறது ராஜு ஈஸ்வரணின் பஞ்சாமிர்தம்.
அபிராமி ராமநாதன் தயாரிக்கும் இப்படத்தில் நாசர், ஜெயராம் முக்கிய வேடம் ஏற்றுள்ளனர். கதாநாயகியாக சரண்யா மோகன் நடிக்கிறார்.
தனது தாத்தாவை தேடி ஊட்டி வருகிறார் சரண்யா மோகன். ஆனால், தேடல் கைகூடாமல் போகிறது. மனம் வெறுத்து மலையிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயல்கிறார். அவர் மலையிலிருந்து கீழே விழும் இடம், மாரிசனின் கல்லறை இருக்கும் இடம், எந்த மாரிசன்?
சரண்யா மோகனை காப்பாற்றும் மாரிசன், அவரது பணக்கார தாத்தா நாசருடன் அவரை சேர்த்து வைக்க முயல்கிறார். படத்தில் இடும்பன் கதாபாத்திரமும் வருகிறது. இதில் நடிப்பதாக இருந்த கலாபவன் மணி சில காரணங்களால் நடிக்காமல் போகவே, அந்த வேடத்தில் படத்தின் இயக்குனர் ராஜு ஈஸ்வரனே நடிக்கிறார்.
சரண்யா மோகன் இடம்பெறும் பாடல் காட்சியொன்று சமீபத்தில் படமாக்கப்பட்டது. இதற்கு முன்னாள் நடிகையும் ரகுராம் மாஸ்டரின் மகளுமான காயத்ரி ரகுராம் நடனம் அமைத்தார்.
|