முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > சினிமா செய்தி > வதந்தியை பொய்யாக்கிய ப்ருத்விராஜ்!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வதந்தியை பொய்யாக்கிய ப்ருத்விராஜ்!
சபாபதியின் மா படத்தில் ஸ்ரீகாந்த், பூமிகாவுடன் நடிக்கிறார் ப்ருத்விராஜ். மா கதையை சபாபதி முதலில் கூறியது பிரகாஷ் ராஜிடம். தனது டூயட் மூவிஸ் சார்பில் படத்தை தயாரிப்பதாகச் சொன்ன பிரகாஷ்ராஜ், சபாபதிக்கு முன்பணமும் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

டூயட் மூவிஸின் கடைசி இரு படங்கள் தோல்வி அடைந்ததால் சபாபதியின் புராஜெக்ட் தள்ளிப்போனது. இதற்கு மேலும் காத்திருக்க முடியாது என்று சபாபதி பிடித்த புதிய தயாரிப்பாளர்தான் அ. கிருஷ்ணமூர்த்தி.

இது தெரியவந்ததும், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்தார் பிரகாஷ்ராஜ். இவரின் நெருங்கிய நண்பர் என்பதால் ப்ருத்விராஜ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் சபாபதி இயக்கும் மா-வில் நடிக்க மாட்டார் என்று வதந்தி பரவியது. இதனை நேற்று பொய்யாக்கினார் ப்ருத்விராஜ்.

ஏவி.எம். ஸ்டுடியோவில் நேற்று நடந்த மா தொடக்க விழாவில் பூமிகா, ஸ்ரீகாந்துடன் ப்ருத்விராஜும் கலந்துகொண்டார். அப்படியானால் பிரகாஷ்ராஜின் புகார்?

பிசுபிசுத்து விட்டதாக கூறுகிறார்கள் சங்கத்தில்!
மேலும்
அண்ணன் தம்பி ஜோடியாகும் நயன்தாரா!
தமிழில் போலீஸ் போலீஸ்?
பெயர் மாறும் பியா!
பாலியல் தொழிலாளியாக மேகா!
பிரேசிலில் ரோபோ?
கதிரின் மாணவர் தினம்!