முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > சினிமா செய்தி > த‌மி‌ழி‌ல் ‌ரிலைய‌ன்‌ஸி‌ன் ‌பி‌க் ‌பி‌க்ச‌ர்‌ஸ்!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
த‌மி‌ழி‌ல் ‌ரிலைய‌ன்‌ஸி‌ன் ‌பி‌க் ‌பி‌க்ச‌ர்‌ஸ்!
ரிலைய‌ன்‌ஸி‌ன் ‌பி‌க் ‌பி‌க்ச‌ர்‌ஸ் தனது ‌பிரமா‌ண்ட காலடியை த‌மி‌ழ் ‌சி‌னிமா தயா‌ரி‌ப்‌பி‌ல் எடு‌த்து வை‌க்‌கிறது. இத‌ன் முத‌ல் தயா‌ரி‌ப்பு, சூ‌ர்யா நடி‌க்கு‌ம் ‌சி‌ங்க‌ம்!

பரு‌‌த்‌தி ‌வீர‌ன், ‌‌‌ஜி‌ல்லுனு ஒரு காத‌ல் பட‌ங்களை தயா‌ரி‌த்த ‌ஸ்டுடியோ ‌கி‌‌ரீ‌ன் ஞானவே‌ல் அடு‌த்து சூ‌‌‌ர்யா நடி‌ப்‌பி‌ல் ஹ‌ரி இய‌க்கு‌ம் ‌சி‌ங்க‌ம் பட‌த்தை தயா‌ரி‌க்‌கிறா‌ர். கே.‌வி.ஆன‌ந்‌தி‌ன் அய‌ன் முடி‌ந்த ‌பிறகு ‌சி‌ங்க‌ம் ‌சீ‌றி‌ப் பா‌ய்‌கிறது.

இதனை ஞானவே‌லி‌ன் ‌ஸ்டுடியோ ‌கி‌‌ரீ‌ன், ‌‌ரிலைய‌ன்‌ஸி‌ன் ‌பி‌க் ‌பி‌க்ச‌ர்‌ஸூட‌ன் இணை‌ந்து தயா‌ரி‌க்‌கிறது. ‌பி‌ப்ரவ‌ரி‌யி‌ல் இதே கூ‌ட்ட‌ணி தயா‌ரி‌க்கு‌ம் பட‌த்‌தி‌ல் சூ‌‌ர்யா‌வி‌ன் த‌ம்‌பி கா‌ர்‌த்‌தி கதாநாயக‌ன். இய‌க்க‌ம் சுரா‌ஜ்.

பி‌க் ‌பி‌க்ச‌ர்‌ஸி‌ன் இ‌வ்‌விரு பட‌ங்களு‌ம் ‌பிரமா‌ண்ட ப‌ட்ஜெ‌ட்டி‌‌ல் தயாரா‌கி‌ன்றன. ‌சி‌‌ங்க‌த்து‌க்கே‌ற்ற பு‌ள்‌ளிமானை பட‌த்து‌க்காக தேடி வரு‌கிறா‌ர் ஹ‌ரி. மா‌ன் அக‌ப்ப‌ட்டது‌ம் பட‌ப்‌பிடி‌ப்பு‌க்கு ‌கிள‌ம்பலா‌ம் என கா‌த்‌திரு‌க்‌கிறா‌ர்க‌ள்.
மேலும்
ஸ்ரீ ஐய‌ப்பா- ‌சீஸ‌ன் பட‌ம்!
சரண்யா மோகன் - ரைஸிங் ஸ்டார்
தர‌ண் இசை‌யி‌ல் யுவ‌ன்!
வைரமு‌த்து‌வி‌ன் வேக‌ம்!
நாயக‌னி‌ன் ஓப‌‌னி‌ங்!
குசேல‌ன்- ’முடிவு'‌க்கு வராத ‌பிர‌ச்சனை!