கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » வெங்கட்பிரபுவும் கண்டிஷன்களும்!
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
'சென்னை-28' படத்தை வெற்றிப் படமாக கொடுத்த வெங்கட்பிரபு அடுத்து இயக்கி வெளிவர இருக்கும் படம் 'சரோஜா'. படம் எப்படி இருக்குமென்று தெரியாது. எத்தனை நாட்கள் ஓடும் என்றும் தெரியாது.

ஆனால் அடுத்தப் படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்க வேண்டும் என்று வெங்கட்பிரபுவுக்கு தினம் வகுப்பெடுத்துக் கொண்டு இருக்கிறார் அவரின் அப்பா கங்கை அமரன். அத்தோடு பல கண்டிஷன்களும் போடுகிறாராம்.

அதாவது, வெங்கட்பிரபுவின் சம்பளம் மட்டும் ஒரு கோடி. இசை யுவன் சங்கர்தான் அமைக்க வேண்டும், தன் இளைய மகன் பிரேம்ஜிக்கு முக்கியமான கதாபாத்திரம் அல்லது காமெடி கேரக்டர் கொடுக்கப்பட வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் படத்தில் இரண்டு பாடல்களாவது தனக்கு கொடுக்கப்பட வேண்டும் என்றெல்லாம் படம் இயக்க கேட்டு வரும் தயாரிப்பாளர்களை கதிகலங்க வைத்துக்கொண்டு இருக்கிறார் கங்கை அமரன். இதற்கெல்லாம் ஒத்துக்கொள்ளும் பட நிறுவனங்களுக்கு மட்டுமே வெங்கட் படம் இயக்குவாராம். இல்லையென்றால் 'நோ'தானாம்.

இதற்கும் சம்மதித்து ஒரு சில நிறுவனங்கள் படம் இயக்கிக் கொடுக்க ஒப்பந்தம் செய்துள்ளது. திறமை இருந்தால் எதற்கும் தயார் என்பதற்கு இது ஒரு உதாரணம்தான்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: சென்னை-28 வெங்கட்பிரபு கங்கை அமரன்