கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » மர்மயோகி - கஜோலுக்கு பதில் பத்மப்ரியா?
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
மர்மயோகி பெயருக்கேற்ப மர்மமாகவே உள்ளது. அடுத்த மாதம் மும்பையில் பிரமாண்ட தொடக்க விழாவுடன் ஆரம்பிக்கும் இப்படத்தின் கதாநாயகி யார்?

சென்ற வாரம் வரை கஜோல் என்றார்கள் உறுதியாக. இப்போது பத்மப்ரியாவின் பெயரும் கதாநாயகி பட்டயலில் சேர்க்கப்பட்டுள்ளது.

மிருகம் படத்தில் ஏற்பட்ட பிரச்சனைக்குப் பிறகு தமிழ் என்றாலே பத்மப்ரியாவுக்கு வேப்பங்காய். அர்ஜுனுடன் துரை படத்தில் நடிக்க ஒப்பந்தமானவர், காஸ்ட்யூமுக்கு காசு நிறைய கேட்டதால் படத்திலிருந்தே நீக்கப்பட்டார். தற்போது தமிழில் பத்மப்ரியா நடிக்கும் ஒரே படம் சேரனின் பொக்கிஷம்.

இந்நிலையில்தான் கமலின் மர்மயோகியில் பத்மப்ரியா நடிக்கயிருப்பதாக கமல் அலுவலக வட்டாரம் தெரிவிக்கிறது. அப்படியானால் கஜோல்? கால்ஷீட் பிரச்சனை, அதனால் நடிக்கவில்லையாம்.

கமல் படம்... கடைசி நேரத்திலும் கதாநாயகிகள் மாறலாம்!
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: மர்மயோகி கஜோ‌ல் பத்மப்ரியா