கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » திரையில் சென்னை சைக்கோ!
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
சென்னையை கலக்கிக் கொண்டிருக்கும் சைக்கோ கொலைக்காரனால் நகரமே பீதியில் ஆழ்ந்துள்ளது. நள்ளிரவில் வெளியே வர தைரியசாலிகளே நடுங்குகிறார்கள். சைக்கோவால் அனைவரும் கவலையில் இருக்க ஒருவர் மட்டும் உற்சாகத்தில் திக்கிறார்.

அடுத்து என்ன கதை பண்ணலாம் என ரூம் போட்டு யோசித்தும் 'ஆக்ரா' இயக்குனர் சித்திரைச் செல்வனுக்கு 'நாட்' எதுவும் சிக்கவில்லையாம். அப்போதுதான் இந்த சைக்கோ பீதி. அட, இது நல்லாயிருக்கே என்று சைக்கோ கொலைகாரனையும், அவனை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரிகளையும் வைத்து 'சைக்கோ' என்ற பெயரில் ஸ்கிரிப்டே தயார் செய்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழிகளில் படம் தயாராகிறதாம். ரங்கீலா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் இதனைத் தயாரிக்கிறது.

படத்தில் போலீஸ் அதிகாரி சைக்கோவை எப்படி பிடிக்கிறார் என்ற சூட்சுமத்தை சித்திரைச் செல்வன் வெளியிட்டால் சென்னை போலீசின் தலைவலி தீரும்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: சென்னை சைக்கோ