கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » சினிமா செய்தி » வைரமுத்து மண்டபத்தில் வெடிகுண்டு புரளி!
சினிமா செய்தி
Feedback Print Bookmark and Share
 
வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கியின் திருமணத்தை முதல்வர் கருணாநிதி நடத்தி வைத்தார். சென்னையின் ஒருபுறம் இந்த மங்கள நிகழ்ச்சி நடக்க, இன்னொருபுறம், சென்னை ட்ரெஸ்ட் புரம் பொன்மணி திருமண மண்டபம் அமளி துமளிபட்டது.

வைரமுத்துக்கு சொந்தமான பொன்மணி திருமண மண்டபத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மண்டபத்துக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. இதனைத் தொடர்ந்து மண்டபத்தைச் சுற்றி போலீஸ் படை குவிக்கப்பட்டது.

மண்டபத்தில் திருமணம் நடந்து கொண்டிருக்கும் போதே, போலீசார் வெடிகுண்டு சோதனையை நடத்தியதால் அந்த ஏரியாவே பீதியானது.

வியர்க்க விறுவிறுக்க பல மணி நேரம் தேடியும் வெடிகுண்டுக்கு பதில் சிவாசி வெடிகூட சிக்கவில்லை. அதன்பிறகே, வெடிகுண்டு மிரட்டல் வெற்று மிரட்டல் என தெரியவந்தது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: வைரமுத்து வெடிகுண்டு புரளி