முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > சினிமா செய்தி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
யு டி.வி. தயாரிப்பில் செல்வராகவன்!  Search similar articles
ஹீரோக்களிடம் கால்ஷீட் வாங்கி வைத்துக்கொள்ளும் வழக்கம் மலையேறிவிட்டது.

துடிப்பான இளம் இயக்குனர்கள் தான் சினிமா தயாரிப்பில் இறங்கியிருக்கும் கார்ப்ரேட் கம்பெனிகளின் குறி. இதில் முன்னணியில் இருக்கிறது யு டி.வி. நிறுவனம்.

'வாரணம் ஆயிரம்' படத்தை இயக்கி வரும் கெளதம் மேனன், அடுத்து யு டி.வி. தயாரிக்கும் படத்தை இயக்குகிறார். தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு ஹீரோ.

இதே யு டி.வி. நிறுவனம் செல்வராகவனை தனது மூன்று படங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. செல்வராகவனின் இயக்கத்தில் நடிக்க நான் நீ என்று முன்னணி ஹீரோக்கள் போட்டி போடுகின்றனர்.

'ஆயிரத்தில் ஒருவன்' படத்தை இயக்கி வரும் செல்வா, அடுத்து சூர்யா, தனுஷ், விக்ரம் ஆகியோரை வைத்து தலா ஒரு படம் இயக்குகிறார். மூன்றும் யு டி.வி.க்காக என்பதை சொல்லத் தேவையில்லை.

மூன்றில் எது முதலில் என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லையாம் செல்வராகவன்.
மேலும்
ரகுவரன் - மாறிய வேடம்!
பிருத்விராஜ் - மீண்டும் வில்லன்!
நான் கர்த்தரின் மகள் - கலங்கடிக்கும் நடிகை!
கணவர் படத்தில் குஷ்பு!
கரணின் கந்தா!
தசாவதாரம் - தணிக்கைக் குழு விளக்கம்!