முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > சினிமா செய்தி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ரம்யாவாகும் ராகிணி!
நடிகைகள் எப்போது பெயரை மாற்றுவார்கள் என்று சொல்ல முடியாது. முதல் நாள் வரை ரம்யாவாக இருப்பவர்கள் மறுநாள் படுக்கையை விட்டு எழும்போது திவ்யாவாக பெயர் மாறியிருப்பார்கள்.

சண்ட-யில் நதியாவின் மகளாக வந்து சுந்தர் சி-யை காதலித்தவர் ராகிணி. சமீபகாலத்தின் சொதப்பல் நாயகி என்ற பெயரும் சண்ட மூலம் ராகிணியை வந்து சேர்ந்தது.

சுந்தர் சி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் தீயிலும் ராகிணிதான் நாயகி. படம் குறித்த செய்திகளில் நாயகியின் பெயர் ரம்யா என்றிருந்தால் குழம்ப வேண்டாம்.

ராகிணி தனது பெயரை ரம்யாவாக மாற்ற உள்ளார். ரம்யா அவரது ஒரிஜினல் பெயராம். குத்து ரம்யா தனது பெயரை திவ்யாவாக மாற்றியதால், தனது சொந்தப் பெயரான ரம்யாவுக்கு மாறுவதாகக் கூறினார் ராகிணி அலைஸ் ரம்யா.

ராசிக்காகவே இந்த பெயர் மாற்றம் என்கிறார்கள் சிலர்.
மேலும்
பார்த்திபன் - ஆயிரத்தில் ஒருவன்!
மீண்டும் காஜாமைதீன்!
தெலுங்கில் கெளதம் வாசுதேவ மேனன்!
சிங்கத்துக்கு செக்!
எஸ்.பி.பி. சரணின் புதிய படம்!
களைகட்டும் கேன்ஸ்!