முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > சினிமா செய்தி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பெருமாளில் பாடிய கலைஞர் பேரன்!
கலைஞர் கருணாநிதியின் குடும்பத்திற்கும் கலைக்கும் இடைவெளியே இல்லை என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார் கலைஞரின் பேரனான அறிவுநிதி.

அறிவுநிதி கலைஞரின் மகன் மு.க. முத்துவின் மகன். எழுபதுகளில் தமிழ்த் திரையில் கதாநாயகனாக உலா வந்த மு.க. முத்து, சமீபத்தில் தேவா இசையில் மாட்டுத்தாவணி படத்துக்காகப் பாடினார்.

தந்தை எட்டடி பாயும்போது மகன் பத்தடியாவது பாய்வதுதானே மரியாதை!

மு.க. முத்துவின் மகன் அறிவுநிதி ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் சுந்தர் சி.யின் பெருமாள் படத்துக்காக ஒரு பாடலைப் பாடினார். சென்ற வாரம் பாடல் பதிவு நடந்தது.

வாய்ப்பு வந்தால் தொடர்ந்து பாடும் முடிவில் இருக்கிறாராம் கலைஞரின் பேரன்.
மேலும்
மே 23 பாண்டி ரிலீஸ்!
மலேசியா - தமிழின் சரணாலயம்!
தங்க மோசடி - விசாரணை பயத்தில் நடிகர்கள்!
திரு. கெளதம் எஸ்.எஸ்.எல்.சி.!
தசாவதாரம் - வெளிப்பட்ட ரகசியம்!
பாடாய் படுத்தும் அயன் வில்லன்!